தமிழ்நாடு

மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது: அண்ணாமலை மீது ஜெயக்குமார் தாக்கு!

Published

on

சில தினங்களாக பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்து வருவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் என்று கூறினார். இதற்கு அதிமுகவின் ஜெயக்குமார் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

#image_title

பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது குறித்து பேசிய அண்ணாமலை, தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வார்கள். அண்ணாமலையான நான் லீடர். லீடர் மாதிரி தான் முடிவெடுப்பேன். மேனேஜர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன்.

ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ? துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. ஜெயலலிதா மாதிரியான ஒரு தலைவர் இனி பிறக்கப்போவது இல்லை. அந்த அளவுக்கு ஆற்றல், நிர்வாக திறமை, அரவணைப்பு, இரும்புக்கரம் கொண்டு செயல்படுவது என அனைத்துக்கும் சொந்தக்காரர் அவர் என்றார்.

மேலும், செஞ்சிக் கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது என விமர்சித்தார் ஜெயக்குமார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version