உலகம்

உலகில் உள்ள மொத்த கொரோனா வைரஸ்களின் எடை இவ்வளவுதான்: கணிதவியல் வல்லுனர் தகவல்

Published

on

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் சீனாவில் உள்ள வூகான் என்ற பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது என்பதும் அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவத் தொடங்கிவிட்டது என்பது தெரிந்ததே.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக இந்தியாவில் இருந்த நிலையில் செப்டம்பர் முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு தளர்வும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முழுவதுமாக குறைந்து விட்டது என்றே கூறலாம். இந்த நிலையில் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களை கொரோனா வைரஸ் பாதித்திருந்தாலும், உலகில் உள்ள மொத்த கொரோனா வைரஸ்களையும் ஒரே ஒரு கூல் டிரிங்ஸ் டின்னில் அடைத்து விடலாம் என லண்டனைச் சேர்ந்த கணிதவியல் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்

உலகம் முழுவதிலுமுள்ள கொரோனா வைரஸின் மொத்த எடையை சுமார் 500 கிராம் மட்டுமே இருக்கும் என்றும் அதனை ஒரு 300மில்லி லிட்டர் கூல்டிரிங்ஸில் டின்னில் அடைத்து விடலாம் என்று அவர் ஆராய்ச்சி மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டு தெரிவித்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version