தமிழ்நாடு

ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்து கட்சிகள் சம்மதம்!

Published

on

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே ஆக்சிஜனுக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று ஒப்புக் கொண்டிருக்கின்றன

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்கலாம் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றும் சிபிஐ கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். வேதாந்த நிறுவனத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக மட்டும் திறப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் திமுகவை சேர்ந்த கனிமொழி மற்றும் ஆர்எஸ் பாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்து ஆக்சிஜன் தயாரித்தால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதி இன்றி பிற மாநிலங்களுக்கு அளிக்கக்கூடாது என்றும் அனைத்து கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜனுக்காக திறக்கலாம் என ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version