தமிழ்நாடு

மேகதாது விவகார அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேகதாது விவகாரம் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேகதாது விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது உறுதி என அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என சமீபத்தில் டெல்லி சென்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேகதாது விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூட்டியுள்ளார். இந்த கூட்டம் வரும் 12ஆம் தேதி நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 12ஆம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவு பெற்ற கட்சிகளும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் மேகதாது விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கர்நாடக மாநில எதிர்க்கட்சிகளும் அனைத்துக் கட்சிக் கூட்ட வேண்டும் என அம்மாநில முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version