தமிழ்நாடு

தீபாவளி அன்று இறைச்சிக்கடைகள் இயங்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் மற்றும் இறைச்சி ஆகியவை தான் என்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி அன்று இறைச்சி விற்பனை செய்ய தடை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய தினத்திலும் இறைச்சி வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகள் அன்றைக்கு விற்பனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழை எளியவர்கள் வீட்டில் கூட அன்றைக்கு அவர்களுடைய சக்திக்கு ஏற்ப சிக்கன் மட்டன் என அசைவ உணவுகளை எடுத்து சமைத்து சாப்பிட்டு வருவது தமிழகத்தின் வழக்கமான ஒன்றாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை என அறிவித்துள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி மகாவீர் நிர்மான் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை செய்ய தடை என்றும் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள் மற்றும் இறைச்சி விரும்பிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நவம்பர் 3ஆம் தேதியே பலர் இறைச்சிகள் எடுத்து வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version