தொழில்நுட்பம்

இன்று முதல் அனைத்து நெட்வொர்க் calling-ம் இலவசம்; Jio பயனர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

Published

on

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்தியர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம், ‘வாழ்நாள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் இலவசம்’ என்கிற ஒற்றைத் திட்டம்தான். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் ஜியோவுக்கு ஏற்பட்ட பலகட்ட நெருக்கடிகள் காரணமாக, இந்த சிறப்பு வசதி நீக்கம் செய்யப்பட்டது. இதற்கு ஜியோ தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதே நேரத்தில் ஜியோ நிறுவனம், ‘2021 ஆம் ஆண்டு முதல் அன்லிமிடெட் காலிங் வசதி மீண்டும் கொடுக்கப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தது.

தான் தெரிவித்தபடி, ஜியோ நிறுவனம், இன்றிலிருந்து அனைத்து நிறுவன மொபைல் நம்பர்களுக்கும் அழைப்புகளை மேற்கொள்வதை முற்றிலும் இலவசமாக்கி உள்ளது. இதன் மூலம், ஜியோவின் எந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் இருந்தாலும், அனைத்து மொபைல் நம்பர்களுக்கும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் பெற முடியும்.

ஏற்கெனவே ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்களால், ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் திக்குமுக்காடி போயிருக்கின்றன. தற்போது அன்லிமிடெட் காலிங் வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளதால் அந்நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் எனத் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version