இந்தியா

மீண்டும் ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் தேர்வு: அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் தேர்வுகளும் நேரடியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ள நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 6 மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்தால் பகல் நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடியாக மற்றும் ஆன்லைன் தேர்வுகளை நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version