உலகம்

தொடரும் பந்த்.. உருவாகும் பணத்தட்டுப்பாடு.. ஏடிஎம்கள் மூடல்!

Published

on

டெல்லி: நாடு முழுக்க நடக்கும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்ஏக்கள் மூடப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுக்க அகில இந்திய பந்த் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பேருந்துகள், கடைகள் இயங்கவில்லை.

போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் பல இயங்கவில்லை. இதனால் பல முக்கிய அரசு பணிகள் முடங்கியது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பல ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று பல ஏடிஎம்கள் இதனால் மூடப்பட்டது.

பந்த் காரணமாக நேற்று எந்த ஏடிஎம்மிற்கும் பணம் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நாடு முழுக்க பல வங்கிகளின் ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டது. இன்று பணத்தட்டுப்பாடு தொடரும் என்பதால் ஏடிஎம்கள் செயல்பட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version