தமிழ்நாடு

திமுகவிலிருந்து இந்துக்கள் வெளியேறுங்கள்.. எச்.ராஜா சர்ச்சை!

Published

on

மதுரை: திமுக கட்சியில் உள்ள இந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக அதிமுக., அரசு முன்வரவேண்டும்.அரசு இதில் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் எந்த இந்து பண்டிகையாக இருந்தாலும் அதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

திமுக இந்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும்,  தலைமை தாங்குவது வழக்கமாகி விட்டது. இதனால் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இதனால் திமுக கட்சியில் உள்ள ஹிந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version