இந்தியா

நினைவிடங்கள். அருங்காட்சியகங்களை மூட தொல்லியல் துறை உத்தரவு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய மற்றும் மாநில அரசால் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூட தொல்லியல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூட வேண்டும் என மத்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு மத்திய தொல்லியல் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் திறக்கப்பட்டு இருந்தால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகம் மூடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version