தமிழ்நாடு

அனைத்து சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்தது: சென்னை மாநகராட்சி

Published

on

சென்னையில் கன மழை வெள்ளத்தால் மூழ்கிய அனைத்து சுரங்கப் பாதைகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளும் வெள்ள நீரால் மூழ்கியது என்பதும் இதனால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போர்கால நடவடிக்கையினை அடிப்படையில் சுரங்க பாதைகளில் வெள்ள நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர் என்பதும் மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே பல சுரங்கப் பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்தியின்படி சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த அக்டோபர் 25 முதல் நவம்பர் 16 வரை 697.80 மி.மீ. மழை பெய்துள்ளது என்றும், மேலும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version