தமிழ்நாடு

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றுகிறது திமுக: கூட்டணி கட்சிக்கு பதவிகள் உண்டா?

Published

on

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போதுள்ள முன்னிலை நிலவரங்களை வைத்து பார்க்கும் போது திமுக அனைத்து 21 மாநகராட்சிகளிலும் கைப்பற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கைப்பற்றிய வார்டுகள் எண்ணிக்கையில் பாதி கூட அதிமுக கைபற்ற வில்லை என்பதால் அதிமுகவுக்கு ஒரு மாநகராட்சியை கைப்பற்ற வாய்ப்பில்லை என்பதும் மற்ற கட்சிகள் மாநகராட்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைவான வாக்குகளே பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது .

திமுக 21 நகராட்சிகளில் மட்டுமின்றி 121 நகராட்சிகளிலும் 322 பேரூராட்சிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலை போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version