தமிழ்நாடு

சென்னையின் 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை: அதிமுக க்ளீன் போல்ட்!

Published

on

பொதுவாக சென்னை திமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த முறை ஆட்சியை அதிமுக கைப்பற்றிய போதிலும் சென்னையில் அதிகமான தொகுதிகளில் திமுக தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தான் முன்னிலையில் உள்ளன என்பதும் அதிமுக சென்னையில் கிளீன் போல்டாகி உள்ளதாக தெரிகிறது.

சென்னையில் உள்ள அண்ணா நகர், சேப்பாக்கம் , ஆர். கே நகர், எக்மோர், துறைமுகம், கொளத்தூர், மைலாப்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருவதால் கண்டிப்பாக இந்த தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெரம்பூர், ராயபுரம், சைதாப்பேட்டை, திருவிக நகர், ஆயிரம் விளக்கு, தி நகர், வேளச்சேரி, வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது.

சென்னையில் நட்சத்திர வேட்பாளர்களான ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டாக்டர் எழிலன் ஆகியோர் முன்னிலையிலும், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குஷ்பு ஆகியோர் பின்னடைவிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version