இந்தியா

சொத்து வரி செலுத்தாத பல்கலைக்கழகம்.. வங்கி கணக்கை முடக்கிய கார்ப்ரேஷன்!

Published

on

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சொத்து வரி செலுத்தவில்லை என்ற காரணத்துக்காக, அதன் வங்கி கணக்கை அலிகர் நகராட்சி முடக்கியுள்ளது.

கடந்த 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான சொத்து வரியை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது. மொத்தமாக இதுவரை 14.83 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழகத்துக்குத் தேவையான அளவு வாய்ப்பு வழங்கிவிட்டோம். ஆனால் அதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்ற முடிவுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளோம் என்று அலிகர் கார்பேஷன் கூறுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தங்களது சொத்து வரி நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை என்றால், அதன் வங்கிக் கணக்கு கார்பேஷன் கணக்காக மாற்றப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version