உலகம்

சீனா வானில் “ஏலியன்” வருகை.!

Published

on

நேற்று இரவு சீனா வானில் தென்பட்ட மர்ம ஒளி அந்நாட்டு மக்களிடைய மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மாலை 6.45 மணியளவில் சீனாவில் உள்ள பெய்ஜிங், சாங்சிங், ஷான்ஸி மற்றும் மங்கோலியா ஆகிய இடங்களில் தெரிந்த ஒளியை பார்த்த மக்கள் பலரும் ஏலியன் வருகிறார்கள் என்று கத துவங்கிவிட்டனர்.

இன்னும் சிலர் தங்கள் கற்பனைக்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக்கொண்டனர். அவர்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை பதிவு செய்தது மட்டுமல்லாமல், அங்கு நிகழ்ந்த நிகழ்வை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர்.

வானில் தோன்றிய மர்ம ஒளி ஒரே இடத்தில் நில்லாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்ததால் சிலர் அது பெரிய வால் கொண்ட டிராகன் என்றும், மேலும் சிலர் அது வேற்றுகிரக விண்கலமாக இருக்கக்கூடும் என்றும் தெவித்துள்ளனர்.

ஆனால் யு.எப்.ஓ நிபுணர்கள், அது ஏலியன் விண்கலமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை, ஆனால் அது ராக்கெட் மோட்டாரின் சுவடுகளாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரம் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஃபால்கான் 9 ராக்கெடை விண்ணில் செலுத்தும் பொழுது இதே போன்ற ஒரு ஒளி பிம்பம் வெளிப்பட்டது. சீன வானில் தென்பட்ட அந்த ஒளி சீனா அமெரிக்காவிற்கு போட்டியாக ரகசியமாக உருவாக்கும் ஹைப்பர்சோனிக் ராக்கெட் ஏற்படுத்திய ஒளியாக இருக்கலாம் என்று  யு.எப்.ஓ நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.

 

Trending

Exit mobile version