சினிமா செய்திகள்

ஆர்ஆர்ஆர்’ பதிவுகளை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியது உண்மைதான்: அலியாபட் விளக்கம்

Published

on

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அலியாபட், அந்தப்படத்தின் ஒருசில போஸ்ட்களை தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது உண்மை தான் என அலியாபட் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தற்செயலாக நடக்கும் சில சம்பவங்களை கொண்டு தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், நான் எப்போதும் பழைய பதிவுகளை நீக்குவது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.

ஆர்ஆர்ஆர் போன்ற படத்தில் நடித்ததை நினைத்து நான் பெருமையாகவே கருதுகிறேன் என்றும், நான் நடித்த சீதா பாத்திரத்தில் நான் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டேன் என்றும், இன்னும் சொல்லப்போனால், ஆர்ஆர்ஆர் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு நிறைய அனுபவத்தை தந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தை தெளிவுபடுத்துவதற்கு ஒரே காரணம், ராஜமௌலி சார் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அந்தப் படத்துக்கு உயிர் கொடுக்க பல ஆண்டுகள் கொடுத்த உழைப்பு தான் என்றும், இந்தப் படம் தொடர்பாக என்னைத் தொடர்புபடுத்தி வரும் அனைத்து தகவல்களும் தவறானவை என்றும் அலியாபட் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version