சினிமா செய்திகள்

கமல்-சூர்யாவின் ‘விக்ரம் 3’ படத்தின் நாயகி இவர்தானாம்!

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி விக்ரம் படத்தின் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகும் என்று கமலஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்தார். மேலும் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்த நிலையில் இந்த படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கி முடித்து விட்டு விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தின் பணி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் பாலிவுட் நடிகை அலியாபட் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி முடித்து விட்டதாகவும் உரிய காலத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அலியாபட் சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version