ஆட்டோமொபைல்

2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா? 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்!

Published

on

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் 2 மாதம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது 4 வயதுக்கு அதிகம் உள்ளவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

ஆனால், இரண்டு சக்கரம் வாகனங்களில் செல்லும் போது, குறிப்பாகப் பள்ளி நேரங்களில் பெற்றோர் மட்டும் ஹெல்மெட் அணிந்தும், கூட வரும் மாணவர்கள் ஹெல்மெட் இல்லாமல் வருவதையும் பார்த்து இருப்போம்.

அது மட்டுமல்லாமல், இரண்டு சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையைப் பின்பற்றாதவர்களையும் அதிகளவில் பார்த்து இருப்போம்.

இப்படி ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், கர்நாடக போக்குவரத்து காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை விதித்துள்ளது. அதன் படி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகனங்கள் பிடிபட்டால், அந்த வாகனத்தை ஓட்டி வருபவர்களின் வாகன உரிமம் 3 மாதங்கள் வரை இடை நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து விதிகளின் படி, இரண்டு சக்கரம் வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், வாகனத்தில் உட்கார்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version