வணிகம்

உஷார்.. ஏப்ரல் 1 முதல் இந்த 8 வங்கிகளின் ‘செக்’குகள் செல்லாது!

Published

on

நடப்பு நிதியாண்டில் பல வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 8 வங்கிகளின் செக்குகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அளவு மூலதனம் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை வங்கிகளை இணைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு.

அண்மையில் தேனா வங்கி, விஜயா வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டது. கார்ப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் இரண்டும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அலகாபாத் வங்கிகள் இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டன.

எனவே இணைக்கப்பட்ட வங்கிகளின் செக்குகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லாது. இந்த வங்கிகள் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளனவோ அந்த வங்கிகளின் செக்குகள் மட்டுமே செல்லும்.

வங்கிகள் இணைக்கப்பட்டதன்படி தேனா வங்கி, விஜயா வங்கி, காப்ரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அலகாபாத் வங்கி, யுனைடெட் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் செக்குகள் பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, இந்தியன் வங்கியாக இருந்தால் மட்டுமே ஏப்ரல் 1-ம் தேதி முதல் செல்லும்.

மேலும் இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் சம்மந்தபட்ட வங்கி கிளைகளை அனுகி புதிய செக் புக்குகளை பெற்றுக்கொள்ல வேண்டும். இந்த வங்கிகளீன் செக்குகளை வங்கி கணக்கில் சமர்ப்பிக்காமல் உள்ளவர்களும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்திவிடுவது நல்லது.

seithichurul

Trending

Exit mobile version