தமிழ்நாடு

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 700 காளைகளை அடக்க காத்திருக்கும் 300 காளையர்கள்

Published

on

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும் பார்வையாளர்கள் வந்து குவிந்துவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழு ஊரடங்கு காரணமாக இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

இதில் 700 காளைகள் பங்கேற்க உள்ளன என்பதும் இந்த காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த காளை முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் ஒரு சொகுசு கார் பரிசு அளிக்கப்படும் என்றும் அதேபோல் சிறந்த மாடுபிடி வீரருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு கார் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்ககாசு பரிசாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பல சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன என்பதும் அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version