சினிமா செய்திகள்

AK62 Shooting Update: மார்சில் தொடங்கும் AK62 படப்பிடிப்பு!

Published

on

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் ஆகியோர் மூன்றாவது முறை கூட்டணியில் உருவான படம் “துணிவு. வாரிசுக்கு போட்டியாக பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மங்காத்தாவுக்கு பிறகு அஜித் க்ரே கதாபாத்திரமாக நடிக்கும் இப்படம், கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்டது. துணிவு இதுவரை உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு பட வெற்றிக்குப் பிறகு தன் குடும்பத்துடன் வகேஷன் சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் வகேஷன் முடித்து தமிழ்நாடு திரும்பியுள்ள நடிகர் அஜித் விரைவில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்ற ஆண்டு இயக்குநர் விக்னேஷ் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் , சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் தளத்திலிருந்து ஏகே 62 மற்றும் அஜித் புகைப்படத்தை நீக்கினார். இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

மற்றொருபுறம் No Guts No Glory என்ற துணிவு பட வசனம் பொறித்த டிசர்ட் அணிந்து இயக்குநர் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் வைரலானது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தான் என்றும், இந்தப் படம் ஏகே 62 இல்லை மங்காத்தா 2 என்றும் சமூக வலைதளங்களில் குழப்பம் தொடர்ந்தது.

ஆனால் இதை உருதி செய்ய எந்த அதிகாரப்பூர்வத் தகவல்களும் இதுவரை வெளியாகத நிலையில், தற்போது ஏகே 62 படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version