தமிழ்நாடு

அறிக்கையை சமர்ப்பித்தார் ஏகே ராஜன்: தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Published

on

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கித் தருவோம் என தேர்தலுக்கு முன்னர் திமுக வாக்குறுதி அளித்தது என்பதும், அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த குழுவுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் நீதிமன்றம் மனுதாக்கல் செய்த கரு.நாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏகே ராஜன் தலைமையிலான குழுவினர் நீட்தேர்வு தாக்கம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கலந்து ஆலோசனை செய்தனர். இதில் பெரும்பாலானோர் நீட் தேர்வு தேவையில்லை என்றும் நீட் தேர்வு வேண்டும் என்று சிலரும் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் ஏகே ராஜன் குழுவினர் அறிக்கை ஒன்றை தயார் செய்து அதனை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ந்த அறிக்கையில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து அதன் பின் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கோருவது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி குறிக்கப்பட்டு விட்டதை அடுத்த ஆண்டாவது நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version