சினிமா செய்திகள்

வைரலாகும் அஜித்தின் துப்பாக்கி பயிற்சி புகைப்படம்!

Published

on

5 வாரங்கள் ஆன நிலையிலும், ஏகப்பட்ட புதுப் படங்கள் வந்த போதிலும் அஜித்தின் விஸ்வாசம் தமிழகம் முழுவதும் 80 சதவீத அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கார் ரேஸ், பைக் ரேஸ், நடிப்பு, புகைப்பட கலைஞர் பாசமுள்ள தந்தை என பல அவதாரங்கள் எடுத்த அஜித், தற்போது முறையான துப்பாக்கி பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியில் அமிதாப் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத் நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version