சினிமா செய்திகள்

கசிந்த ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ… கொண்டாடும் ‘தல’ ரசிகர்கள்!

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தையும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்கிறார்.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக வலிமை பட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆனால், இன்னும் படப்பிடிப்பில் பெரும் பகுதி பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வலிமை, எப்படியும் அடுத்த ஆண்டு நடுவாக்கில்தான் ரிலீஸாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. படம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை, அடிக்கடி அப்டேட் மட்டுமாவது கொடுங்கள் என்று இயக்குநர் வினோத்தை நச்சரித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். குறிப்பாக, ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் அல்லது டீசரை சீக்கிரம் வெளியிடுங்கள் என்று அவருக்கு அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

அதேபோல பல நெட்டிசன்கள், போனி கபூரையும் டேக் செய்து அப்டேட் கேட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது. #Valimaiதிருவிழாஆரம்பம் என்கிற ஹாஷ்-டேக்கின் கீழ் தற்போது இந்தப் படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version