சினிமா செய்திகள்

இந்தியா முழுவதும் பைக் ரைடு சென்றுள்ள தல அஜித்… இன்னும் ஒரு சில நாட்களில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்!

Published

on

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து பரபரப்புத் தகவல் வந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளதாக படக்குழுத் தரப்பு தகவல் சொல்கிறது. இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. நேர்கொண்ட பார்வையும், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரம் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் அஜித். அவர் அவ்வப்போது, தன் பைக்கை எடுத்துக் கொண்டு லாங் ட்ரிப் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள அஜித், இந்தியா முழுவதும் பைக் ரைடு சென்று வருவதாக சொல்லப்படுகிறது. அவர் தற்போது வட இந்தியாவில் முகாமிட்டு உள்ளாராம். இன்னும் ஒரு சில நாட்களில் அஜித் சென்னைக்கு வந்துவிடுவார் எனத் தெரிகிறது. அவர் இங்கு வந்த பின்னர், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிந்த வட்டாரம் சொல்கிறது.

எப்படியும் தமிழகத் தேர்தலுக்குப் பின்னர் தான், வலிமை படம் வெளியாகும் எனவே தெரிகிறது. அதே நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் கொடுக்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதனால், தல ரசிகர்கள், வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version