சினிமா

இணையத்தில் வைரலாகும் அஜித் மகன் ஆத்விக்கின் போட்டோ…

Published

on

நடிகர் அஜித் ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

 

5 வயதாகும் ஆத்விக் தனது தாய் ஷாலினியுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தனது தனிப்பட்ட குடும்ப விவகாரங்களை அஜித் எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்வார் என்பதால் பல வருடங்கள் கழித்து ஆத்விக்கின் புகைப்படம் தற்போதுதான் வெளி உலகிற்கு வருகிறது.

 

வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக இருக்கிறது. சமீபத்தில் நடிகர் விஜய் தன் மகனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியானது. அதை பெரிய அளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். அஜித் தொடர்பாக எந்த ஒரு அப்டேட் வந்தாலும் ட்ரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள் இதை ட்ரெண்ட் செய்யாமல் விடுவார்களா என்ன..?

Trending

Exit mobile version