சினிமா செய்திகள்

அஜித்தின் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய கார்!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது சொகுசு கார் களஞ்சியத்திற்கு மேலும் ஒரு விலை உயர்ந்த காரை சேர்த்துள்ளார்.

அண்மையில் துபாயில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்த அஜித், அங்குள்ள ஒரு கார் டீலர்ஷிப்பில் ஃபெர்ராரி SF90 ஸ்டிராடேல் மாடல் காரை வாங்கியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு சுமார் 9 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஏற்கனவே லம்போர்கினி, லேண்ட் ரோவர், மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ள அஜித், தற்போது வாங்கியுள்ள ஃபெர்ராரி கார் அவரது கார் களஞ்சியத்தின் புதிய வரவாக உள்ளது.

அஜித்தின் இந்த புதிய கார் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version