சினிமா செய்திகள்

அஜித்தின் மாணவர்களுக்குக் கிடைத்த பரிசு மழை!

Published

on

பெங்களூருவில் நடைபெற்று வந்த ஏரோ இந்தியா 2019 கண்காட்சியில் நடைபெற்ற ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடிகர் அஜித் தலைமையிலான தக்‌ஷா குழு மூன்று பிரிவுகளில் வெற்றிபெற்றுள்ளது.

நடிகர் அஜித்துக்கு கார் ரேஸ், பக் ரேஸ், ஃபோட்டோகிராப்பி உள்ளிட்ட துறையில் ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லாமல் இவருக்குச் சிறிய ரக விமானம் உற்பத்தி செய்வது மீதான ஆர்வமும் இருந்து வந்தது.

சிறு வயதில் மெக்கானிக்காக இருந்த அஜித் சிறிய ரக விமானங்களைச் சொந்தமாக உருவாக்கி அதை சோதனை செய்துவந்தார். நடிகர் அஜித்துக்குள்ள இந்த ஆர்வத்தை தங்களது மாணவர்களுக்குக் கற்றுத்தரும் படி அண்ணா கோரிக்கை வைக்க அதை ஏற்றுக்கொண்டது மட்டும் இல்லாமல் சிறப்பான பயிற்சியையும் அளித்து வருகிறார்.

நடிகர் அஜித் அளித்த பயிற்சியில் அவரது தலைமையிலான ‘தக்‌ஷா’ குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் ஏரோ இந்தியா ட்ரோன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெற்று நீண்ட நேரம் பறந்து சாதனை படைத்துள்ளது.

தக்‌ஷா

ட்ரோன் போட்டியானது 5 பிரிவுகளாக நடைபெற்றது. 4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்பு விமானப் பிரிவில் தக்‌ஷா அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையைப் பெற்றது. மேலும் 4 முதல் 20 கிலோவுக்கு இடையிலான விமான கண்காணிப்பு பிரிவில் தக்‌ஷா குழு முதல் இடத்தை பிடித்தது மட்டுமில்லாமல் 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வென்றுள்ளது.

மேலும் விமானம் பறக்கும் சவால் பிரிவில் தக்‌ஷா இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. இதற்கு அஜித் தலைமையிலான குழு லட்சம் ரூபாய் பரிசைத் தட்டிச்சென்றது.

seithichurul

Trending

Exit mobile version