சினிமா செய்திகள்

மீண்டும் திரையரங்குகளில் ‘பில்லா’… பிரம்மாண்ட கொண்டாட்டத்துக்கு தல ரசிகர்கள் அழைப்பு!

Published

on

தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது. பில்லா, வரும் மார்ச் 13 ஆம் தேதி, பல திரையரங்குகளில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையாக இருந்தது. பல ஃபிளாப் படங்களைக் கொடுத்து வந்த அஜித், பில்லா மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் ரீமேக் என்பதாலும், அஜித் ரசிகர்களால் இந்தப் படம் அதிகம் கொண்டாடப்பட்டது. இன்றளவும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் 13 ஆம் தேதி, திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் ‘பில்லா’ ரிலீஸ் செய்வது உறுதியாகியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் ‘அகில இந்திய ஆசைநாயகன் அஜித்குமாரின் உதவும் கரங்கள்’ ரசிகர் மன்றம், 13 ஆம் தேதி இரவு இப்படத்தைக் கொண்டாட ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து கட்- அவுட் அடித்துள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version