சினிமா செய்திகள்

ரசிகர்களை அழவைத்த அஜித் – விஸ்வாசம் முழு விமர்சனம்!

Published

on

வேதாளம், விவேகம் படங்களின் படுதோல்விக்கு பிறகும் அஜித் சிவா மீது வைத்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாகவே வீரமாகவும் விருவிருப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எமோஷனல் டிராமாவாகவும் இந்த படத்தை சிவா கொடுத்துள்ளார்.

படத்தின் கதை:

முன்னதாக இணையதளங்களில் கசிந்த அதே கதை தான். ஹேர் டை அடித்து 10 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே இளமையான அஜித் என்ட்ரி கொடுக்கும் இடத்தில் இருந்து ரசிகர்களின் கைதட்டல் காதை கிழிக்க கதை துவங்குகிறது. ஊருக்குள் மருத்துவராக வரும் நயன்தாரா, அடாதடி தூக்குத் துரையை போலீசில் பிடித்து கொடுக்கிறார். பின்னர், அவரின் இன்னொரு முகம் தெரியவர, அந்த வழக்கை வாபஸ் வாங்குகிறார்.

மோதலில் ஆரம்பித்தால் காதலில் தானே முடியும் என்ற அந்த பழைய அரைத்த மாவையே இந்த படத்திலும் காதலில் அரைத்திருக்கிறார் சிவா. ஆனால், நயன் எக்‌ஷபிரஷன்ஸ்காகவும், தல கம் பேக்குக்காகவும் அந்த காட்சிகள் அலப்பறையாகவும் ரசிக்கும் படியும் ஆகவுமே இருக்கிறது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தை பிறக்கும் தருவாயில் அடிதடி காரணமாக அஜித் பிரசவ நேரத்தில் நயன்தாரா அருகில் இல்லை. இதனால், நீங்க திருந்த மாட்டீங்க, அடிதடின்னு தான் இருப்பீங்கன்னு சொல்லி நயன்தாரா குழந்தை தூக்கிக் கொண்டு அஜித்தை விட்டு பிரிந்து விடுகிறார்.

அந்த சண்டையின் காரணமாக அஜித்தும் சிறை செல்ல நேர்கிறது. சிறையில் இருந்து சில ஆண்டுகள் கழித்து வெளியே வரும் அஜித், மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறுகிறார்.

தனது மனைவியையும், மகளையும் கபாலி ரஜினி போல தேடிச் செல்கிறார். என்னை அறிந்தால் படத்தில் குட்டி மகளாக நடித்திருந்த பேபி அனிகா, இப்போ பெரிய பொண்ணா வளர்ந்துவிட்டார். 12 அல்லது 13 வயது பெண் கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார்.

மும்பையில் வசிக்கும் நயன்தாரா மற்றும் பேபி அனிகாவுக்கு வரும் ஆபத்தை எப்படி வீரம் பாணியில் அஜித் முறியடித்து, தனது மனைவி குழந்தையுடன் சேர்கிறார் என்பதை இரண்டாம் பாகத்தில் எமோஷனல் கலந்து ரசிகர்களை அழும் அளவிற்கு தனது நடிப்பால் பின்னி எடுத்துள்ளார் அஜித்.

படத்தின் பலம்:

அஜித், நயன்தாரா இருவருமே நீண்ட நாட்களுக்கு பிறகு எமோஷனல் கலந்த காட்சிகளில் நடித்து கலக்கியுள்ளனர். இமான் இசையில் வரும் மெலோடி பாடல்கள் அற்புதம். அடிச்சு தூக்கு பாடல் அஜித் ரசிகர்களை ஆட்டம் போட்டு அலப்பறை பண்ண வைத்தது.

படத்தின் மைனஸ்:

படத்தின் வில்லன் மற்றும் காமெடி காட்சிகள் இந்த படத்தின் வேகத்தை வெகுவாக குறைத்து விட்டன. மேலும், படத்தின் பழைய திரைக்கதை அடுத்த காட்சி இதுவாகத்தான் என யூகித்து விடும் அளவிற்கே இருந்தது எல்லாம் படத்தின் மைனஸ்களாக உள்ளன்.

எப்படி இருந்தாலும் இந்த பொங்கலுக்கு தல ரசிகர்களுக்கு நல்ல விருந்து என்றே சொல்லலாம். வீரம் படத்திற்கு பிறகு மீண்டும் குடும்பம் குடும்பமாக தியேட்டர் போய் பார்க்கும் அளவிற்கு விஸ்வாசம் நல்ல படம் தான்.

விஸ்வாசம்: சினி ரேட்டிங்: 3/5.

Trending

Exit mobile version