சினிமா செய்திகள்
ரசிகர்களை அடுத்து அஜித், விஜய்யும் நேரடியாக மோத முடிவா?
அஜித் விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம் .
அஜித்-விஜய் ஆகிய இருவருமே தலையிட்டு ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் மோதிக் கொண்ட நிலையில் இன்னொரு பக்கம் அஜித் விஜய்யே நேரடியாக மோதிக் கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான அஜித் 61 திரைப்படமும் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 66 திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே நாளில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இந்த 2 படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது. அதே போல் இந்த இரண்டு படங்களும் வரும் தீபாவளி அன்று வெளியிட இருப்பதாகவும் வீரம் மற்றும் ஜில்லா படங்களுக்கு பின்னர் அஜீத்-விஜய் படங்கள் மோதுவது இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுவதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.