சினிமா செய்திகள்
அஜித் – வித்யாபாலன் டூயட் பாடல் இன்று ரிலீஸ்!
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற பாடல் ரிலீசாகிறது.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜித்குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.
பிங்க் படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரமாக தமிழில் வித்யா பாலன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்யா பாலனுக்கும் அஜித்துக்கும் இடையே வரும் டூயட் பாடலாக அகலாதே அமைந்துள்ளதால், நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த பாடல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.