சினிமா செய்திகள்

கொள்கையை மாற்றி கொள்ளாமல் லைகாவிடம் கமிட் ஆகிய அஜித்!

Published

on

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் அஜித் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கார்பரேட் நிறுவனமான லைக்கா தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறித்து சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பான பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு படம் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அவரது கொள்கையில் மாற்றமில்லை என்று கூறப்படுகிறது. லைக்கா நிறுவனம் அஜித்தின் 62 வது படத்தை தயாரித்தாலும், இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பு நிறுவனமாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் உள்ளது என்றும் எனவே அஜித், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தான் படம் நடிக்க இருப்பதாகவும் அதனால் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு படம் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இரண்டு நிபந்தனைகள் அஜித் விதித்ததாகவும், அதில் ஒன்று இந்த படத்தில் எந்தவிதமான அரசியலும் இருக்கக்கூடாது என்றும் இரண்டாவது ஃபேமிலி ஆடியன்ஸ் வரும் அளவுக்கு சென்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version