சினிமா செய்திகள்
ஆட்டோவில் சென்ற ‘தல’ அஜித் – வைரல் வீடியோ!
![Ajith in Auto - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/03/Ajith-in-Auto.jpg)
அஜித் நடிப்பில் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தத் திரைப்படும் வெளிவராத நிலையில், அவரது ரசிகர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளார்கள். இந்நிலையில், தல அஜித், ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தற்போது அஜித், வலிமை படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.
Latest video of Thala #Ajith sir in auto.
| #Valimai | #ValimaiFirstLookOnMay1st | pic.twitter.com/EQAOeoECMI
— Ajith (@ajithFC) March 18, 2021
கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.
அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் அஜித்தின் 50வது பிறந்தநாள், வரும் மே 1 ஆம் தேதி வருகிறது. அப்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.