சினிமா செய்திகள்
மோகன்லால் படத்தில் ‘தல’ அஜித்!!!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால், மலையாளத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாக்களின் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ மாபெரும் வெற்றியைப் பெற்றது. தமிழில் இந்தப் படத்தின் முதல் பாகம் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்னும் பெயரில் வெளியானது. எனவே பாபநாசம் 2 கமல் நடிப்பில் விரைவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மோகன்லால் முதன்முறையாக ‘பரோஸ் நிதி காக்கும் பூதம்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக 15 வயதில் அறிமுகமாக உள்ளார் எனத் தெரிகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ‘மை டியர் குட்டிச் சாத்தன்’ படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ்தான் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்களுடன், நடிகர் பிரித்விராஜ் மற்றும் தல அஜித்குமார் நடிக்கவுள்ளாதகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழில் அஜித்துக்கு இருக்கும் மாஸ், இந்தப் படத்திற்குப் பின்னர் மலையாளத்திலும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.