சினிமா செய்திகள்

என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம்: அஜித் வேண்டுகோள்!

Published

on

தல அஜித் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தை அஜித் என்று அழைப்பதை விட ‘தல’ என்று அவருடைய ரசிகர்கள் அழைக்க விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் தோனியையும் ‘தல’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைத்து வந்ததால் தோனி மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே சில சமயம் சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னை அஜித்குமார் அல்லது அஜித் அல்லது ஏகே என்று அழைக்கலாம் என்றும் ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்றும் அஜீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது, என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ, அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

’தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version