சினிமா செய்திகள்

அரசியல்வாதிகளிடம் அப்டேட் கேட்பதா? வருத்தத்துடன் அஜித் வெளியிட்ட அறிக்கை!

Published

on

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிக்கெட் மைதானம் என சகட்டுமேனிக்கு கேட்டு வரும் ரசிகர்களுக்கு அஜித் சற்றுமுன் வருத்தத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்‌ மீதும்‌ என்‌ படங்களின்‌ மீதும்‌ அபரிதமான அன்புக்‌ கொண்டு இருக்கும்‌ எதையும்‌ எதிர்பாராத அன்பு செலுத்தும்‌ என்‌ உண்மையான ரகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த வணக்கம்‌.

கடந்த சில நாட்களாக என்‌ ரசிகர்கள்‌ என்ற பெயரில்‌ நான்‌ நடித்து இருக்கும்‌ “வலிமை” சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல்‌, விளையாட்டு மற்றும்‌ பல்வேறு இடங்களில்‌ சிலர்‌ செய்து வரும்‌ செயல்கள்‌ என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம்‌ குறித்த செய்‌திகள்‌ உரிய நேரத்தில்‌ வரும்‌. அதற்கான காலத்தை, நேரத்தை நான்‌ தயாரிப்பாளருடன்‌ ஒருங்‌கிணைந்து நிர்ணயம்‌ செய்வேன்‌. அதுவரை பொறுமையுடன்‌ காத்திதிருக்கவும்‌. உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு எனிமா ஒரு தொழில்‌. நான்‌ எடுக்கும்‌ முடிவுகள்‌ என்‌ தொழில்‌ மற்றும்‌, சமூக நலன்‌ சார்ந்தவை. நம்‌ செயல்களே சமூகத்தில்‌ நம்‌ மீது உள்ள மரியாதையை கூட்டும்‌.

இதை மனதில்‌ கொண்டு ரசிகர்கள்‌ பொது வெளியிலும்‌, சமூக வலைத்தளங்களிலும்‌ கண்ணியத்தையும்‌, கட்டுப்பாட்டையும்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌. என்‌ மேல்‌ உண்மையான அன்பு கொண்டவர்கள்‌ இதை உணர்ந்து செயல்படுவார்கள்‌ என நம்புறேன்‌.

அஜித்தின் இந்த அறிக்கையை அடுத்து அவரது ரசிகர்கள் பொறுமை காப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version