சினிமா செய்திகள்

வாழு வாழ விடு: 30வது ஆண்டை ஒட்டி நடிகர் அஜித்தின் செய்தி

Published

on

தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழு வாழ விடு என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

ரசிகர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகியோர் நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களிடமிருந்து அன்பையும், வெறுப்பாளர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து நியாயமற்ற பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். வாழு வாழ விடு! எதிர்பார்ப்பில்லாத அன்பு எப்போதுமே என்னிடம் இருக்கும்’ என்று அவர் கூறியுள்ளார்.

அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் அவர் தனது பிஆர்ஓ அவர்கள் மூலம் இந்த செய்தியை ரசிகர்களுக்கு அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது ரசிகர்களுக்கும் வெறுப்பாளர்களுக்கும் கூறிய இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அஜித்திடம் இருந்து இப்படி ஒரு செய்தி வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்காததால் ரசிகர்களுக்கும் வெறுப்பாளர்களுக்கும் இந்த செய்தி ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜீத் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version