சினிமா செய்திகள்

தல அஜித்தின் பைக் பயணம்: முதல்முறை வெளியான மாஸ் வீடியோ!

Published

on

தல அஜித் அவர்கள் கடந்த சில நாட்களாக நீண்ட பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும், அவர் பைக் பயணம் செய்யும் போது இடையிடையே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் வாகா எல்லையில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடனும், ரசிகர்களுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாலைவனத்தில் பைக் நிழலில் உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது போன்ற புகைப்படமும், மலை உச்சியில் நின்று போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் இன்னும் வைரலாகிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ajith இந்த நிலையில் தல அஜித்தின் மாஸ் பைக் பயணத்தில் முதல் முறையாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வட இந்தியா பகுதியில் எடுக்கப்பட்டதாகவும் இந்த வீடியோவில் அவர் பைக்கில் பயணம் செய்யும் காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகை சுற்றி வருவதற்காக அவர் தற்போது வட இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் பயிற்சி பைக் பயணம் செய்து வருவதாகவும் இந்தப் பயிற்சி பயணம் முடிந்தவுடன் அவர் உலகை சுற்றும் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் அஜித்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்தின் பயணம் குறித்த வீடியோ முதல்முறையாக வெளிவந்துள்ளதை அடுத்து இந்த வீடியோவை வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version