சினிமா

அஜித் பட நாயகி ஜெயம் ரவிக்கு ஜோடி

Published

on

நடிகர் ஜெயம் ரவி, வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் இவரின் படங்களுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அவர் நடிப்பில் அண்மையில் டிக் டிக் டிக் படம் வெளியானது. விண்வெளியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘அடங்கமறு’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இன்னும் அதிக வசூல் சாதனை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற நிலை தான். அடுத்து அவர் நடிப்பில் அடங்க மறு திரைப்படம் உருவாகிவருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின், அடுத்தப் படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார். இது ஆக்சன் கதையாக இருக்கலாம் என்றும் அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக முதல் முறையாக அஜித், விஜய் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் அகர்வால் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வெளியான ‘போகன்’ படத்தில் காஜல் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில் அது ஒரு சில காரணங்களால் முடியாமல் போனது. எனினும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி காஜலுடன் ஜோடி போடுவார் எனக் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version