சினிமா செய்திகள்

’வலிமை’ டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

நடிகர் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும் பல்வேறு செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து நேற்று மாலை திடீரென டிசம்பர் 30-ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என கிட்டத்தட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஆறு முப்பதுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலருக்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ட்ரெய்லர் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஓடும் என்றும் அதில் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் சேசிங் காட்சிகள் தான் உள்ளன என்றும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக இந்த சேஸிங் காட்சிகள் உள்ளதாகவும் இந்த டிரைலரை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் ஹூமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோரின் காட்சியும் இந்த டிரைலரில் இருப்பதாகவும் இந்த டிரைலர் வெளியான உடன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை பிரமாண்டமாக போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version