சினிமா செய்திகள்

இன்றிரவு 7 மணிக்கு ‘வலிமை’ அப்டேட்: குஷியில் அஜித் ரசிகர்கள்!

Published

on

தல அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் மற்றும் வியாபாரம் சம்பந்தமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவிலான நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சோனி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு ‘வலிமை’ அப்டேட் என்று அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்றும் அதே போல் டிசம்பர் 9ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்றும் கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் குஷி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. .

 

seithichurul

Trending

Exit mobile version