சினிமா செய்திகள்

100 வருடத்தில் செய்யாத சாதனையை ‘வலிமை’ செய்துள்ளது: திருப்பூர் சுப்பிரமணியம்

Published

on

100 வருடம் தமிழ் சினிமாவில் செய்யாத சாதனையை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் செய்துள்ளதாக திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஒரு சில நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் இந்தப் படம் வசூலை குவித்து வருகிறது என்றும் இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் 14 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை பார்வையாளர்களையும் இந்த படம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு 100 வருடத்தில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது என்றும் இந்த படத்திற்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரை அதிகபட்சமாக 700 மற்றும் 800 திரையரங்குகளில் மட்டுமே ரஜினி விஜய் படங்கள் கூட வெளியாகியுள்ள நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் அதாவது கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version