சினிமா செய்திகள்

வலிமை ஷூட்டிங் வெளியான முக்கிய தகவல்!

Published

on

வலிமை படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் கோவிட்-19 காரணமாக வெளிநாடு ஷூட்டிங் தடையானது. சரி டெல்லியில் எடுக்கலாம் என்று பார்த்த போது, டெல்லி அரசும் அனுமதி அளிக்கவில்லை.

எனவே பெரும்பாலான படப்பிடிப்பைச் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் செட் போட்டும் எடுத்து வருகின்றனர்.

இருந்தாலும் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று படத்தில் உள்ளது என்றும், அதை வெளிநாட்டில் தான் ஷூட் செய்ய வேண்டும் என்று எச்.வினோத் விடாப்பிடியாக உள்ளாராம்.

தான் வெளிநாட்டுச் சண்டை கலைஞர்களை வைத்து அந்த சண்டைக் காட்சியைப் பிரம்மாண்டமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். அந்த காட்சி அப்படி அமையவில்லை என்றால் படத்தில் எதிர்பார்த்த பிரம்மாண்டம் இருக்காது. எனவே கண்டிப்பாக வெளிநாடு ஷூட்டிங் செல்ல வேண்டும் என்று எச்.வினோத் கூறியுள்ளார்.

வினோத் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட படக் குழு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சண்டைக் காட்சி காரணமாக வலிமை படம் வெளியாவது இன்னும் தள்ளிப்போகும் என்றும், அஜித் பிறந்தநாள் மே 1-ம் தேதி படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version