சினிமா செய்திகள்

அஜித் பிறந்த நாளில் ஃபர்ஸ்ட்லுக்: போனிகபூரின் ‘வலிமை’ அப்டேட்

Published

on

தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு பல மாதங்களாக அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் இந்த வேண்டுகோளுக்கு தற்போது தயாரிப்பாளர் போனிகபூர் செவி சாய்த்துள்ளர்.

சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது என்பதும், இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரோஷி, கார்த்திகேயா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார் என்பதும், யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version