சினிமா செய்திகள்

மோஷன் போஸ்டரை அடுத்து ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக்: ரசிகர்களை திக்குமுக்காட செய்த போனிகபூர்!

Published

on

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியானது என்பதும் இந்த மோஷன் போஸ்டரின் வீடியோ இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் மோஷன் போஸ்டரை அடுத்து ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அட்டகாசமாக உள்ள இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே ஒரு போஸ்டரை வெளியிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து இன்று மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அத்துடன் கூடுதல் போனசாக தற்போது ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சற்று முன் வெளியான மோஷன் போஸ்டரில் இந்த படம் இந்த ஆண்டே வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

YouTube video player

Trending

Exit mobile version