சினிமா செய்திகள்

’வலிமை’ படத்தின் ரன்னிங் டைம் மூன்று மணி நேரமா? செம விருந்து காத்திருக்கு!

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த டிரெய்லர் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிரைலரை பார்த்து ஆச்சரியத்தில் வாயைப் பிளக்கும் ரசிகர்கள் படம் பார்த்தால் என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் சென்சார் தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் ’வலிமை’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் 35 வினாடிகள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் ’வலிமை’ திரைப்படத்தில் 2 மணிநேரம் சேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் மீதி உள்ள ஒரு மணி நேரத்தில் மட்டுமே இந்த படத்தின் கதை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக இந்த படத்தில் ஸ்டாண்ட் மற்றும் சேசிங் காட்சிகள் இருக்கும் என்ற தகவல் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்பது மிக அதிகம் என்பதால் சிறிது போர் அடித்தாலும் படத்திற்கு பின்னடைவாக இருக்கும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்/ ஏற்கனவே வெளியான புஷ்பா திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பதும் அதேபோல் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படமும் 3 மணிநேரம் ரன்னிங் டைம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version