சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’, ஹிட்லர் அடிமைகளின் கதையா?

Published

on

இயக்குனர் எச் வினோத் கதை என்றாலே அது வித்தியாசமாக இருக்கும் என்பது ’சதுரங்க வேட்டை’ மற்றும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய இரண்டு படங்களில் இருந்து ரசிகர்கள் புரிந்து இருப்பார்கள். மேற்கண்ட இரண்டு படங்களின் சாயலில் அதற்கு முன்பும் அதற்கு பின்பும் படங்கள் வந்தது இல்லை என்பதே அவரது தனித்தன்மைக்கு சான்றாக உள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் பரபரப்பாக பேசப்படும் சாத்தான் ரைடர்ஸ் என்ற கதையை ‘வலிமை’ படத்திற்காக எச். வினோத் எடுத்து உள்ளார் என்பதும் இது தமிழ் இயக்குனர்கள் மட்டுமின்றி இந்திய இயக்குனர்கள் யாரும் தொடாத சப்ஜெக்ட் என்றும் கூறப்படுகிறது.

ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி செய்த ஹிட்லரின் அடிமைகளாக இருந்த சாத்தான் ரைடர்ஸ் என்றும், இவர்கள் பல கொலை கொள்ளையில் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் சிக்கியவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்காக உலகின் பல நாடுகளில் தனிப்படை போலீசார் அமைத்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சாத்தான் ரைடர்ஸ் என்று கூறப்படும் இந்த பைக் ரைடர்ஸ்கள் செய்யும் குற்றங்களும் அவர்களை பிடிக்கும் சர்வதேச போலீஸ்காரர் ஒருவரின் கதைதான் ‘வலிமை’ படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் 50 சதவீதத்துக்கு மேல் பைக் சேஸிங் காட்சிகள் தான் என்றும் அதிலும் தத்ரூபமாக அஜித் மற்றும் வில்லன்கள் பைக்கில் மோதும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

சாத்தான் ரைடர்ஸ்களை பற்றி ஹாலிவுட்டிளே ஒரிரு படங்கள்தான் வந்திருக்கும் நிலையில் ஒரு தமிழ்படம் அந்த கதையம்சத்தில் உருவாக்குவது குறித்து தகவல் அறிந்து உலகமே இந்த படத்தை திரும்பி பார்த்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கதை சாத்தான் ரைடர்ஸ் கதை என்பது நேற்று வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவிலிருந்து உறுதி செய்யப்பட்டவுடன் உலகம் முழுவதும் இந்த படத்தை பார்க்க பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version