விமர்சனம்

வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணிவு – டிவிட்டர் விமர்சனம்!

Published

on

மிகவும் எதிர்பார்ப்புக் கிடையில் அஜித் நடிப்பில் துணிவு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தை முதல் ஷோ பார்த்தவர்கள் டிவிட்டரில் வெளியிட்ட விமர்சனத்தை இங்கு பார்கலாம்.

துணிவு படம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள விகடன் இம்பெஃபக்ட் ஷோ சிபி சக்ரவர்த்தி, “அஜித்தின் ஓப்பன் பெர்பாமென்ஸ் படத்தை ரசிக்க வைக்கிறது. மைக்கல் ஜாக்சன் டான்ஸ், அடிதடி சேஸிங், என மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பட்டாசு வெடிக்கிறார் ஏ.கே. வங்கிகள் செய்யும் அட்டூழியங்களை மணி ஹெய்ஸ்ட் ஸ்டைலில் தட்டிக்கேட்பதே துணிவு படத்தின் ஒன்லைன்.” என தெரிவித்துள்ளார்.

மங்காத்தாவிற்குப் பிறகு மீண்டும் செம்ம கூலான, மாஸான அஜீத்தைப் பார்க்க முடிந்தது. ட்ரெண்டுக்கேத்த வசனங்கள், கடுப்படிக்காத காமெடிகள், அதிரடியான சண்டைக்காட்சிகள் என அதகளம் பண்ணிருக்காரு இயக்குனர் வினோத். பொங்கலுக்கேத்த கொண்டாட்டமான படம் என பத்திரிக்கையாளர் சதீஷ் லக்‌ஷமனன் தெரிவித்துள்ளார்.

துணிவு First Half தல ஆரவார எனர்ஜி ஆட்டம். செம்ம ஸ்பீடு. Second Half வினோத் டச். நல்ல மெசேஜ். பேமிலி ஆடியன்ஸ்க்கும் கனெக்ட் ஆகும். படம் முழுவதும் ஒவ்வொரு சீனுக்கும் ஜிப்ரான் பிஜிம் அசர வைக்குது. மொத்தத்துல நம்ம #துணிவு இந்த பொங்கலுக்கு மாஸ் வின்னிங் என்டர்டெய்னர்.

துணிவு பார்த்தாச்சு… மாஸாகவும் கருத்தாகவும் பட்டையை கிளப்பி இருக்கிறது படம். மக்களுக்கான போர்க்குரலாக அஜீத் சாரை முழங்க வைத்து, அதகளம் ஆடியிருக்கிறார் அ.வினோத். படக்குழுவினருக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்குமான வெற்றியாக கொடி நாட்டியிருக்கிறது துணிவு!

seithichurul

Trending

Exit mobile version