சினிமா செய்திகள்

‘வலிமை’ ரிலீஸ் குறித்து படக்குழுவுக்கு அஜித் அளித்த ஆலோசனை!

Published

on

அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் வெளிநாட்டில் ஒரே ஒரு ஷெட்யூல் மட்டும் பாக்கி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் மே ஒன்றாம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய சமீபத்தில் படக்குழுவினர் ஆலோசனை செய்தனர்.

அப்போது அஜித் பட குழுவினர்களுக்கு ஆலோசனை வழங்கிய போது தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் 100% திரையரங்குகளுக்கு அனுமதி கிடைத்த பின்னர் படத்தை வெளியிடலாம் என்று கூறியதாகவும் அதனை படக்குழுவினர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

சமீபத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னர் மீண்டும் 100% அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளுக்கு 100% அனுமதி வழங்கிய பின்னரே படத்தை வெளியிட வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

எனவே ‘வலிமை’ திரைப்படம் வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித், ஹூமா குரோஷி, கார்த்திகேயா நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version